தொலைக்காட்சி சரிந்து விழுந்ததில் 11 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

infant passed away at andhra

ஆந்திர பிரதேச மாநிலம் சிறீகாகுளம் மாவட்டம், காசிபுகா நகரில் உள்ள நியூ காலணியில் வசித்து வருபவர் வரலக்ஷ்மி. யஸ்வந்த் என்ற மகன், மோகாரினி என்ற 11 மாத பெண் குழந்தை, கணவர் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்த வரலக்ஷ்மி, நேற்று தனது 11 மாத குழந்தை மோகாரினிக்கு உணவு கொடுத்துள்ளார். உணவை சாப்பிட மறுத்த குழந்தை அறையில் அங்கும் இங்குமாக தவழ்ந்து ஓடி விளையாடியுள்ளது.

Advertisment

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அங்கிருந்த தொலைக்காட்சி வயரை பிடித்து இழுத்துள்ளது குழந்தை. இதனால் தொலைக்காட்சி குழந்தையின் மேல் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.