பிறந்து 23 நாட்களே ஆன குழந்தை ஒன்றுக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெலங்கானா மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

infant affected by corona

Advertisment

உலகம் முழுவதும் கரோனா வைரசால், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,000-ஐ கடந்துள்ளது. மேலும், 3,02,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000-ஐ கடந்துள்ளது.நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர்.மேலும், 326 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு குணமாகியுள்ளனர்.

Advertisment

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 35 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர், 773 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் தமிழகத்தில் 69 பேருக்கும்,மத்தியப் பிரதேசத்தில் 63 பேருக்கும்,டெல்லியில் 51 பேருக்கும் தெலங்கானாவில் 40 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,தெலங்கானாவில் கரோனா உறுதி செய்யப்பட்ட 40 பேரில்,பிறந்து 23 நாட்களே ஆன குழந்தையும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.