Advertisment

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அதிரடி திருப்பம்... சிக்கலில் கார்த்திக் சிதம்பரம்...

கடந்த 2007 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு, விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத்தந்ததாகவும், கார்த்திக் சிதம்பரம் அதற்கு உதவியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisment

indrani mukherjee turns approver in inx media case

இது தொடர்பான விசாரணை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கார்த்திக் சிதம்பரம் இந்த வழக்கில் ஜாமினில் உள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறப்போவதாக அறிவித்துள்ளார்.

தனது மகளை கொன்ற வழக்கில் சிறையில் உள்ள அவர், தற்போது ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அப்ரூவராக மாற ஒப்புக்கொண்டுள்ளது இந்த வழக்கில் பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில், உரிய ஆவணங்களுடன் இந்திராணி முகர்ஜியை வரும் 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே அன்றைய தினம் இந்த வழக்கில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

indrani mukherjee karthik chidambaram INX media
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe