ADVERTISEMENT

எல்லைப்பகுதியில் குவியும் ராணுவத்தினர்... பதட்டமான சூழலில் இந்திய - சீன உறவு...

11:09 AM May 26, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

லடாக் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவத்திற்கு இடையே அண்மையில் மோதல் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், லடாக்கை ஒட்டிய எல்லைப் பகுதியில் ராணுவ பாதுகாப்பை அதிகரித்து வருகிறது சீனா.


அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து தற்போது லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் இந்திய- சீன எல்லை பிரச்சனையால் பதட்டம் நிலவி வருகிறது. வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சிக்கிம் பகுதியில் கடந்த மாதம் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியது.

இந்நிலையில் சீன எல்லைப்பகுதியை விரைவாக அடையும் வகையில், லடாக்கில் இந்தியா அமைத்துவரும் புதிய சாலையால் அதிருப்தியடைந்துள்ள சீனா, அப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 5-ஆம் தேதி லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இது 6-ஆம் தேதி காலை வரை நீடித்ததாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது சீனா. அதேபோல இந்தியாவும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT