Skip to main content

நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி பெண் காவலர் உயிருடன் எரிப்பு! போக்குவரத்துக்கு காவலர் கைது!

Published on 16/06/2019 | Edited on 16/06/2019

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்தவர் சௌமியா புஷ்கரன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் புஷ்கரன் அரபு நாட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை சுமார் 4.30 மணி அளவில் இவர் பணி முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

 

murder

 

அப்போது எர்ணாகுளம் மாவட்டம் அவுலா காவல்நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றும் அஜாஸ் என்பவர் தனது காரால் சௌமியாவின் இருசக்கர வாகனத்தின்  மீது மோதியுள்ளார். இதனால் சௌமியா நிலைதடுமாறி கீழே விழுந்ததும் காரிலிருந்து கத்தியுடன் இறங்கிய அஜாஸ் அவரை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து நிலைதடுமாறி சௌமியா தப்பி ஓடிய நிலையில் மீண்டும் விரட்டிச் சென்று சௌமியாவை பலமுறை கத்தியால் குத்தினார்  அஜாஸ்.

 

murder

 

அதன் பின்னும் ஆத்திரம் அடங்காத அஜாஸ் காரில் இருந்து பெட்ரோலை எடுத்து வந்து சௌமியாவின்  மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது பெட்ரோல் தன்மீதும் பட்டதால் அஜாஸ் மீதும் தீப்பற்றியது. ஆடையில் தீப்பற்றிய  நிலையில் அங்கும் இங்கும் ஓடி இறுதியில் ஆடைகளை களைந்து உயிர் தப்பினார்.அவரை  மடக்கிப்பிடித்த அக்கம்பக்கத்தினர் தர்ம அடி கொடுத்து கட்டி வைத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து காவலர் அஜாஸை மீட்டனர்.

 

murder

 

அவரது உடலில் தீக்காயங்கள் காணப்பட்டதால் அவரை ஆலப்புழை மாவட்டம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே எரிந்த நிலையில் கிடந்த பெண் காவலரின் சடலத்தை மீட்டுஉடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் எர்ணாகுளத்தில் பணியாற்றும் காவலர் அஜாஸ்க்கும் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலப்புழையில் பணியாற்றும் பெண் காவலருக்கும் எப்படி பழக்கம் உருவானது, இந்தக் கொலைக்கான பின்னணி என்ன, எதற்காக சௌமியாவை கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

murder

 

இந்த கொடூர கொலை சம்பவம் பொதுமக்களிடையேயும், காவல்துறையினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.