style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் பாட்டியா இதுவரை இண்டிகோ விமான நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக இருந்துவந்தார். இந்த நிலையில் நேற்று அந்நிறுவனம், புதிய தலைமை செயல் அதிகாரியாக ருனோஜய் தத்தாவை (Ronojoy Dutta) நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இவர் அடுத்த ஐந்து வருடங்களுக்கு, நிறுவனத்தின் சர்வதேச விரிவாக்கப் பணிகளை கவனிப்பார் என்றும் இண்டிகோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவராக செபியின் முன்னாள் தலைவர் எம்.தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.