Advertisment

இந்தியாவின் ஆபத்தான பிரபலங்கள் பட்டியல்!! இணையவாசிகளுக்கு ஓர் எச்சரிக்கை...

india's top 10 dangerous celebrities 2020

இந்தியாவில் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை திருட அதிகம் பயன்படுத்தப்படும் பிரபலங்களின் பெயர்களை மெக்கஃபி (McAfee) நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertisment

இந்த பிரபலங்களின் பெயர்களை ஆன்லைனில் தேடும்போது, அவர்கள் குறித்தான செய்திகளை தரும் சில இணையதளங்கள் பயனாளரின் தனிப்பட்ட தகவல்களைஅவர்களது அனுமதியின்றி பெறுவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பாதுகாப்பற்ற இணையதளங்கள் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், இதுகுறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது மெக்கஃபி நிறுவனம். இந்த ஆய்வில், எந்த பிரபலத்தின் பெயரை அதிகம் பயன்படுத்தி இணையதளங்கள் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றன என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த பட்டியலில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் நடிகைகள் தபு, டாப்ஸி பன்னு, அனுஷ்கா சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Advertisment

மெக்கஃபியின் வெளியிட்டுள்ள இந்தியாவின் மிகவும் ஆபத்தான பிரபலங்களின் பட்டியல்:

கிறிஸ்டியானோ ரொனால்டோ

தபு

டாப்ஸி பன்னு

அனுஷ்கா சர்மா

சோனாக்ஷி சின்ஹா

பாடகர் அர்மான் மாலிக்

சாரா அலிகான்

கங்கனா ரனாவத்

திவ்யங்கா திரிபாதி

ஷாருக்கான்

கடந்த ஆண்டு இந்த பட்டியலில் தோனி முதலிடத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Christiano Ronaldo Dhoni
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe