இந்தியாவில் கரோனாபரவல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டேசெல்கிறது. கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்தநிலையில், இந்தியாவின் நிலை மிகவும் கவலையளிப்பதாகஉலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்துஅவர், “இந்தியாவின் நிலை மிகவும் கவலையளிப்பதாகஉள்ளது. பல மாநிலங்களில்கவலைக்குரிய அளவில் கரோனாதொற்று அதிகரிப்பும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின்எண்ணிக்கையும், கரோனா உயிரிழப்புகளும் உள்ளன” என கூறியுள்ளார்.
மேலும், ஆயிரக்கணக்கான ஆக்சிஜன் செறிவூட்டிகள், தற்காலிக மருத்துவமனை அமைப்பதற்கான டெண்டுகள், முகக்கவசங்கள், பிற மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உலக சுகாதாரநிறுவனம் இந்தியாவிற்கு அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், முதல் அலையைவிட, இந்த இரண்டாவது கரோனா அலை மோசமானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.