Advertisment

ஓரினசேர்க்கை குற்றமல்ல தீர்ப்பிற்கு பிறகு திருமணத்திற்கு தயாராகும் இந்தியாவின் முதல் திருநங்கை அரசு அதிகாரி!!

transgender

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஓரினசேர்க்கை குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு இந்தியாவின் முதல் திருநங்கை அரசுஅதிகாரியான ஐஸ்வர்யாதிருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும், திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஐஸ்வர்யா ரிதுபர்ணா பிரதான் என்ற 34 வயதான திருநங்கையான இவர் டெபுடி கமிஷ்னராக ஒரிசாவிலுள்ள கமர்சியல் டாக்ஸ் துறையில் உள்ளார். இந்தியாவின் முதல் அரசு அதிகாரியாக அறியப்படும் இவர் ஓரினசேர்க்கை குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தன் திருமண ஆசையை கூறி தன் ஆண் நண்பரை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், என்னுடைய ஆண் நண்பர் ஒருவர் என்னை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு மூன்று வருடத்திற்கு முன்பே அவரது காதலை வெளிப்படுத்தினார் ஆனால் அப்போது ஓரினசேர்கை தவறு என குறிப்பிடும் சட்டவிதி 377 காரணமாக நான் அதற்கு விருப்பம் தெரிவிக்காமல் குழப்பத்தில் இருந்தேன். ஆனால் அண்மையில் ஓரினசேர்க்கை தவறல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தாங்கள் அடுத்தவருடம் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். மேலும் தங்கள் திருமணம் நீதிமன்றத்தின் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் நடக்கவிருக்கிறது. எங்கள் திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வாழவிருக்கிறோம் என கூறியுள்ளார். மேலும் தன்னைபற்றி குறிப்பிடுகையில், எனது அப்பா ஓய்வுபெற்ற ராணுவவீரர். சிறுவயதில்அவர் எப்போதும் என்னை ஆண் போல இரு என கூறுவார் ஆனால் எனக்குள் ஒரு பெண்மைதான் இருந்துது. எனது சிறுவயதில் சகோதரியின் உடைகளை அணிந்துகொள்வேன். படிக்கு வயதில் விடுதியில் சக நண்பர்கள் மூலம் தொல்லைகள் இருந்தது என குறிப்பிட்டார்.

திருநங்கையான ஐஸ்வர்யா, ரதிகண்டாபிரதான் என்ற பெயரில் கனபகிரி கிராமத்தில் பிறந்து கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரிசா வணிக சேவையில் அதிகாரியாக சேர்ந்தார். அவர் திருநங்கை என்றாலும் உடலளவில் ஆணாகவே இருந்தார். அதன்பின் மனதால் பெண்ணாக இருந்த அவர் 2015-ல் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெயரையும் ஐஸ்வர்யா என மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

377 marriage Transgender
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe