ADVERTISEMENT

இந்தியாவின் முதல் தனியார் ரயில்... என்னென்ன வசதிகள் இருக்கின்றன..? ஒரு அலசல்...

02:52 PM Sep 18, 2019 | kirubahar@nakk…

இந்தியாவின் முதல் தனியார் பயணிகள் ரயில் சேவை வரும் அக்டோபர் 4 தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் இருந்து டெல்லி வரை செல்லும் இந்த ரயிலை வரும் அக்டோபர் 4ஆம் தேதி லக்னோ ரயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். 550 கிலோமீட்டர் பயணத்தை சுமார் 6.15 மணிநேரத்தில் முடிக்கும் வகையில் இந்த ரயில் பாதை திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 758 இருக்கைகள் கொண்ட இந்த ரயிலில் சிறப்பு வசதிகளுடன் கூடிய ஏசி கம்பார்ட்மெண்ட் ஒன்று உள்ளது. அதில் 56 இருக்கைகள் உள்ளன. இதுதவிர 78 இருக்கைகள் கொண்ட 9 ஏசி கம்பார்ட்மெண்ட் உள்ளன. அதைத்தொடர்ந்து ஏசி அல்லாத கம்பார்ட்மெண்ட்டுகள் தனியாக உள்ளது. இடையில் கான்பூர் செண்ட்ரல் மற்றும் காசியாபாத் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேஜாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் வரும் 4 ஆம் தேதி முதல் தனது சேவையை தொடங்கவுள்ளது. பயோ டாய்லெட்டுகள், வைஃபை, தகவல் தரும் எல்.சி.டி திரைகள், சென்சார் கொண்டு இயங்கும் தண்ணீர் குழாய்கள், புத்தகம் படிப்பதற்கான தனி விளக்குகள், ஆகியவை இதன் சிறப்பம்சமாக கூறப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT