indias first apple brand own retail shop opened mumbai 

Advertisment

உலகில் முன்னணியில் உள்ள தொலைத்தொடர்புமற்றும் தொழில்நுட்பசாதனங்களைஉற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல், கணினி, மடிக்கணினிமற்றும் கைக்கடிகாரம் ஆகியவற்றின் தேவை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் இதுநாள்வரை ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வாங்கி வந்தனர்.

இந்நிலையில் இந்தியாவில் தனக்கென தனிப்பட்ட முறையில்பிரத்யேகமாகநேரடி விற்பனை நிலையம் இல்லாத நிலையில் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் சார்பில் மும்பையில் நேரடி விற்பனை நிலையம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில் தற்போது மும்பையில் இந்தியாவின் முதல் நேரடி விற்பனை நிலையத்தை இன்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், பாந்த்ரா குர்லா என்ற வணிக வளாகத்தில் திறந்து வைத்தார். மேலும் டெல்லியில் தனது 2வது விற்பனை நிலையத்தை வரும் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.