ADVERTISEMENT

ஈரானில் இருந்து 58 பேரை மீட்டுவந்த இந்திய விமானப்படை...

12:00 PM Mar 10, 2020 | kirubahar@nakk…

சீனாவின் வூஹான் நகரிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 95 நாடுகளில் 1,09,400 பேர் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 3800க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரானில் இதன் தாக்கம் அதிகமாக உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து மீன்பிடி தொழில் புரியச் சென்ற மீனவர்கள் மற்றும் மாணவர்கள் உள்படப் பல நூறு பேர் இரானில் சிக்கி இருந்தனர். அவர்களில் முதல் கட்டமாக 58 பேரை இந்திய விமானப்படை இன்று மீட்டு வந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரானில் கரோனா தொற்றால் 7,161 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 237 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அங்குச் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று முதல்கட்டமாக இந்திய விமானப் படையைச் சேர்ந்த 'சி-17 குளோப்மாஸ்டா்' போக்குவரத்து ரக விமானம் மூலம் 58 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்களை அழைத்து வந்த விமானம் டெல்லி காஜியாபாத்தில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தில் தரை இறங்கியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT