கரோனா வைரஸ் மனித சமூகத்திற்கும், நவீன அறிவியலுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமானபோக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், வெளிநாடுகளில் பணி மற்றும் கல்வி நிமித்தமாக சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வரும் 7 ஆம் தேதி முதல் மீட்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடற்படை கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக கட்டண அடிப்படையில் அழைத்து வரப்படுவார்கள் எனவும், கரோனா பாதிப்பு அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அழைத்து வரப்படுவார்கள். நாடு திரும்பும் அனைவரும் ஆரோக்கிய சேது மொபைல் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.