Advertisment

‘இன்னைக்கு ஒரு புடி’ - நிமிடத்திற்கு 137 பிரியாணி ஆர்டர்களை செய்யும் இந்தியர்கள்

Indians order 137 biryanis per minute

இந்தியர்கள் ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளில் பிரியாணி முதல் இடம் பிடித்துள்ளது.

Advertisment

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கிஓவ்வொரு ஆண்டின் இறுதியிலும் மக்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுப்பட்டியலை வெளியிடும். இதில் கடந்த ஆறு ஆண்டுகளாக பிரியாணி முதல் இடத்தில் இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பட்டியலை தயார் செய்து வெளியிட்டது. அதில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவாக பிரியாணிமுதலிடம் பிடித்துள்ளது. ஆறு ஆண்டுகளைத்தொடர்ந்து ஏழாவது ஆண்டாகவும் பிரியாணியே முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. நாடு முழுவதும் நிமிடம் ஒன்றிற்கு 137 பிரியாணி ஆர்டர்கள் வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

இரண்டாவது இடத்தில் மசால் தோசையும், சிக்கன் ரைஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட சிற்றுண்டி வகைகளில் சமோசா முதல் இடத்தில் உள்ளது.

இறைச்சி வகைகளில் சிக்கன் 29 லட்சத்து 86 ஆயிரம் ஆர்டர்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இறைச்சியை அதிகமாக வாங்கிய நகரங்களின் பட்டியலில் பெங்களூர் முதல் இடத்திலும் ஹைதராபாத் மற்றும் சென்னை இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.

கடந்த தீபாவளி சமயத்தில் பெங்களூரைச் சேர்ந்த நபர் குறிப்பிட்ட ஒரு ஆர்டரில் ரூ.75,378 மதிப்புள்ள உணவுகளை ஒரே நேரத்தில் ஆர்டர் செய்தது அதிகபட்ச தொகையுடைய ஆர்டராக முதலிடம் பிடித்துள்ளது. இவருக்கு அடுத்தபடியாக புனேவை சேர்ந்த நபர் தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கும் சேர்த்து ரூ.71,229 மதிப்புள்ள பர்கர் வகைகளை ஆர்டர் செய்துள்ளார்.

briyani swiggy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe