உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 26 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1.77லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 700-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 23,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ghj_32.jpg)
உலக வல்லரசு நாடுகளில் எல்லாம் கரோனா பாதிப்பு கை மீறி சென்ற நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு சமூக பரவல் என்ற நிலையை எட்டவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் சீன மாணவர்களிடம் தில்லி சீன தூதரகத்தில் இருந்து நோய் கரோனா நோய் தடுப்பு நிபுணர் சாங் வென்கோங் வீடியோ காணொளி காட்சியில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "கரோனாவை தடுப்பதில் இந்தியர்களின் மன வலிமையைவிட, உடல் வலிமை அதிகம் இருக்கின்றது. இதனை பல சமயங்களில் நீங்களும் பார்த்திருக்கலாம். நான் இதை சில வாரங்களுக்கு முன்பு நேரில் கண்டேன். ஒரு மத வழிபாட்டு இடத்திற்கு முக கவசம் அணியாமல் வந்ததை பார்த்தேன். அவர்கள் இந்த நோயை பார்த்து மற்ற வளர்ந்த நாடுகள் பயப்படுவதை போல் பயப்படவில்லை. அச்ச உணர்வு இல்லை என்றாலே எந்த நோயில் இருந்தும் மீண்டு விடலாம். அந்த வகையில் இந்தியர்கள் 90 சதவீதம் பேர் இந்த பாதிப்பு ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்வார்கள் என்றே நான் கருதுகிறேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)