/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/roshinin.jpg)
டாப் 10 உலக பணக்காரர்கள்பட்டியலில், இந்தியப் பெண் ஒருவர் இடம் பிடித்திருத்திருக்கிறார்.
2025ஆம் ஆண்டுக்கான உலக டாப் 10 பணக்காரர்கள் ஹுரான் குளோபல் ரிச் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அந்த பட்டியலில், ஹெச்சிஎல் (HCL) டெக்னாலஜியின் தலைவரான ரோஷ்னி மல்ஹோத்ரா ரூ.3.5 லட்சம் கோடி மதிப்புடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஹெச்சிஎல் டெக்னாலஜியின் நிறுவனரான ஷிவ் நாடாருக்குப் பிறகு, அவரது மகளான ரோஷ்னி மல்ஹோத்ரா அந்த நிறுவனத்தை தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2020இல் தலைவராகப் பொறுப்பேற்ற ரோஷ்னி, ஷிவ் நாடாரின் அறக்கட்டளைக்கு அறங்காவலராகவும் உள்ளார்.
ஹுருன் குளோபல் ரிச் பட்டியல் 2025 இல் பல இந்திய பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில், கவுதம் அதானி இந்தியாவின் இரண்டாவது பணக்காரராகவும், உலகளவில் 18வது இடத்திலும் உள்ளார். சன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தின் திலீப் ஷாங்வி இந்தியாவில் நான்காவது இடத்திலும், விப்ரோவின் அசிம் பிரேம்ஜி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)