Published on 08/10/2018 | Edited on 08/10/2018

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்கு பகுதியை நோக்கி நகரவுள்ளது. இது புயலாக மாறி, லட்ச தீவு மற்றும் அரபிக்கடல் பகுதியில் 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று திருவனந்தபுரத்திலுள்ள இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.