உலக அளவிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் செல்லவுள்ளதாக, இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் நகரில் செப்டம்பர் 14, 15 தேதிகளில் நடைபெறும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா பங்கேற்கிறது.

Advertisment

Indian tennis team going to Pakistan ISLAMABAD DAVIS CUP

டேவிஸ் கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணி இடையேயான தொடர் இல்லை என இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது. உலக அளவிலான போட்டி என்பதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லவுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. 55 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் செல்லவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.