கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பாகிஸ்தானில் படித்துவந்த 14 மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 165 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2,00,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ நெருங்கி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 168 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வாகா எல்லை வாயிலாக 43 இந்தியர்கள் நேற்று இந்தியா வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் அமிர்தசரஸ் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 43 பேரில் 29 பேர் துபாய்க்குப் பயணம் மேற்கொண்டவர்கள் எனவும், மீதமுள்ள 14 பேர் பாகிஸ்தானில் படித்து வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.