அத்துமீறி தங்கள் எல்லைப் பகுதியில் சுற்றிய இந்திய உளவு விமானத்தைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

indian spy drone pakistan

Advertisment

Advertisment

இதுகுறித்து அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சிறியரக இந்திய உளவு விமானம் ஒன்று, சங்க் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி பாகிஸ்தானுக்கும் சுமார் 600 மீட்டர் தூரம் உள்ளே வந்தது. இந்திய விமானத்தின் அந்த ஆத்திரமூட்டும் செயலுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் ராணுவம் அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.

இந்திய ராணுவத்தின் இதுபோன்ற தேவையற்ற செயல்கள், ஏற்கனவே வகுக்கப்பட்ட விதிமுறைகளையும், இருநாட்டு வான்வழி ஒப்பந்தத்தையும் மீறிய செயலாகும். மேலும், 2003-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறுவதாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.