அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தகத்தின் இடையில் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 77.17 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், வர்த்தகத்தின் இடையில் இதுவரை இல்லாத அளவாக 77.81 ரூபாயாக வீழ்ச்சிக் கண்டது. சர்வதேச எண்ணெயில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் சுமார் 124 டாலரில் வர்த்தகமாவது நிதிச்சந்தைகளில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறுவது போன்றவையே ரூபாய் மதிப்பு சரிய காரணமாக கூறப்படுகிறது.