Advertisment

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன இந்தியன் ரயில்வே

jkl

Advertisment

கரோனா தொற்றால் ரயில்களில்நிறுத்தப்பட்டிருந்த சமைக்கப்பட்ட உணவு விற்பனை தற்போது மீண்டும் தொடங்கப்படும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. கரோனா தொற்று குறைந்ததையடுத்து சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. நாளடைவில் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தது. ஆனால் எப்போதும் போல் ரயில்களில் உணவு சமைத்துவிற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடையும் நாளடைவில் சில ரயில்களில் விலக்கிக்கொள்ளப்பட்டு பயணிகளுக்கு உணவு விநியோகம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வரும் 14ம் தேதி முதல் நாட்டில் உள்ள அனைத்து விரைவு ரயில்களிலும் சமைக்கப்பட்ட உணவுவிற்பனை செய்யப்படும் என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் பயணிகளுக்கு மீண்டும் சூடான உணவு கிடைக்க உள்ளது.

food Train
இதையும் படியுங்கள்
Subscribe