Skip to main content

"மகாத்மா காந்தியின் பாதையைப் பின்பற்ற உறுதியேற்போம்" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்..

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

mahatma gandhi

 

இந்திய மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கப் போராடிய மகாத்மா காந்தி, 1948 ஆம் ஆண்டு இதே நாளில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் 74 நாளாவது நினைவு தினம் இன்று (30.01.2021) அனுசரிக்கப்படுவதோடு, இந்திய சுதந்திரத்திற்காக இன்னுயிர் ஈந்த சுதந்திர வீரர்களை போற்றும் தியாகிகள் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. 

 

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "ஒரு நன்றியுள்ள தேசத்தின் சார்பாக, இந்த நாளில் தியாகத்தை தழுவிக்கொண்ட தேசத்தின் தந்தை மகாத்மா காந்திக்கு எனது தாழ்மையான அஞ்சலி. அமைதி, அகிம்சை, எளிமை வழிமுறைகளில் தூய்மை மற்றும் பணிவு போன்ற அவரது கொள்கைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். அவருடைய உண்மை மற்றும் அன்பின் பாதையைப் பின்பற்ற நாம் அனைவரும் உறுதியேற்போம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் இலட்சியங்கள் தொடர்ந்து மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன எனத் தெரிவித்துள்ளார். மேலும் "தியாகிகள் தினத்தன்று இந்தியாவின் சுதந்திரம் மற்றும் ஒவ்வொரு இந்தியரின் நல்வாழ்விற்காக தங்களை அர்ப்பணித்த, தலைசிறந்த பெண் மற்றும் ஆண்களின் பெரும் தியாகங்களை நினைவுகூறுவோம்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்