Skip to main content

சுகோய் 30 எம்கேஐ விமானத்தில் பறந்த மூன்றாவது இந்திய குடியரசுத் தலைவர்!

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

indian president draupadi murmu fly sukhoi thirty mki

 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூன்று நாள் பயணமாக கடந்த 6 ஆம் தேதி அசாம் சென்றுள்ளார். நேற்று காசிரங்கா தேசியப் பூங்காவில் யானைகள் திருவிழாவை அவர் தொடங்கி வைத்தார்.

 

இந்த பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (08.04.2023) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அசாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து சுகோய் 30 எம்கேஐ என்ற போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். முப்படைகளின் தலைமைத் தளபதியாக விளங்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரம்மபுத்திரா மற்றும் தேஜ்பூர் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் பறந்து இமயமலைப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களைப் பார்வையிட்டார். இந்த விமானத்தை 106வது விமானப் படைப் பிரிவின் கமாண்டர் அதிகாரியான குரூப் கேப்டன் நவீன்குமார் இயக்கினார். இந்த பயணத்தைத் தொடர்ந்து இந்திய விமானப்படையின் செயல்பாடுகள் குறித்தும் குடியரசுத் தலைவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விமானப் படையின் செயல்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்தார்.

 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த பயணத்தை மேற்கொண்டதன் மூலம் சுகோய் 30 எம்கேஐ விமானத்தில் பறந்த மூன்றாவது இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டாவது இந்திய பெண் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இதுபோன்ற பயணத்தை முன்னாள் குடியரசுத் தலைவர்களான அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பாட்டில் ஆகியோர் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆளுநர்; பதவி விலக வலியுறுத்தல்

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Demand for resignation for Assam governor engaged in election campaign at rajasthan

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு  கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

 

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3ஆம் தேதி வாக்கி எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. 

 

இந்த நிலையில், அசாம் ஆளுநர் குலாம்சந்த் கட்டாரியா ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ராஜஸ்தான் மாநில திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இருகட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், குடியரசுத் தலைவரும், தேர்தல் ஆணையமும் இதில் தலையிட்டு அசாம் ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த இருகட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளது. 

 

இது குறித்து ஆம் ஆத்மி ராஜஸ்தான் மாநிலத் தலைவர் பாபென் சவுத்ரி கூறியதாவது, “அசாம் ஆளுநர் தனது நாற்காலியின் கண்ணியத்தை வீழ்த்தியுள்ளார். அரசியலமைப்பு நெறிமுறைகளை பாதுகாக்கும் ஆளுநர், அதற்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடமும், குடியரசுத் தலைவரிடமும் புகார் அளிக்கவுள்ளோம்” என்று கூறினார். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பா.ஜ.க முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Election Commission notice to Assam BJP chief minister

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை நேற்று (9ம் தேதி) தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா பகுதியில் கடந்த 18ஆம் தேதி பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது அவர், அந்த மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான அரசை மதமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை குறிப்பிட்டு விமர்சித்தார். மேலும் அவர், அக்பர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார். இவருடைய பேச்சு அப்போது பெரும் பேசு பொருளாக மாறியிருந்தது. 

 

முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் பேச்சு சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இரு சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. அந்த புகாரின் அடிப்படையில், ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி செயல்பட்ட தாங்கள் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்