hgjhgjhg

புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியது.

Advertisment

இந்நிலையில் இன்று காலை இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்திய எல்லைக்குள் புகுந்த இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் இந்திய வான்படையை சேர்ந்த என்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குளாகி அதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இதே நேரம் பாகிஸ்தான் ஊடகங்கள் இந்திய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என செய்து வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து இந்திய விமானப்படை சார்பில் கூறுகையில், "அபிநந்தன் என்ற ஒரு விமானி இதுவரை தளத்திற்கு திரும்பவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக் 21 ரக விமானத்தில் சென்ற அவர் இது வரை திரும்பாத நிலையில் பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை அடிப்படையாக கொண்டு ஊகங்கள் எழுந்து வருகின்றன.