Advertisment

ஒமிக்ரான் கரோனா: தடுப்பூசி தயாரிக்கும் இந்திய நிறுவனம்!

vaccine

இந்தியா மற்றுமின்றிபல்வேறு நாடுகளிலும் கரோனாபரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள கரோனாஅலைக்கு ஒமிக்ரான் வகை கரோனா காரணமாக இருந்து வருகிறது. இந்தச்சூழலில்பைசர் தடுப்பூசி நிறுவனம், ஒமிக்ரான் வகை கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வரும் மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்தது.

Advertisment

இந்தநிலையில்இந்திய மருந்து நிறுவனமானஜென்னோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ், ஒமிக்ரான்தொற்று ஏற்படுவதை தடுக்கும் பிரத்தியேக தடுப்பூசியை தயாரித்து வருவதாகவும், அத்தடுப்பூசி அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் தயாராகிவிடும் எனவும்தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

மேலும் அத்தடுப்பூசி, ஒரு சோதனைக்கு பிறகு இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையேஜென்னோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் தான் தயாரித்துள்ள எம்ஆர்என்ஏகரோனாதடுப்பூசியின் சோதனை தரவுகளை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம்சமர்ப்பித்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

OMICRON VACCINE
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe