indian parties spending on facebook

ஃபேஸ்புக்கில் அதிக செலவு செய்து அரசியல் விளம்பரம் செய்த கட்சிகளின் பட்டியலில் பாஜக முதலிடத்தில் உள்ளது.

Advertisment

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலான ஒன்றரை ஆண்டுகளில், இந்திய அரசியல் கட்சிகள் விளம்பரத்திற்காக எவ்வளவு செலவு செய்தன என்பது குறித்த பாட்டியல் ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் ஒன்றரை ஆண்டுகளில் ரூ.4.61 கோடியை ஃபேஸ்புக் விளம்பரத்திற்காக பாஜக செலவு செய்துள்ளது. முதல் 10 இடங்களில் உள்ள கணக்குகளில் நான்கு கணக்குகள் பாஜகவுடன் தொடர்புடையவை எனவும், அதில் மூன்று கணக்குகளின் பெயர்கள் பாஜக அலுவலக முகவரியுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தனையும் சேர்த்தால் கணக்கில் சேர்த்தால் பாஜகவின் மொத்த செலவு ரூ.10.17 கோடியாக உயரும் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரைக் கடந்த 18 மாதங்களில் செலவுசெய்யப்பட்ட தொகை ரூ. 1.84 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment