Skip to main content

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய முயற்சி

Published on 15/12/2018 | Edited on 15/12/2018

சவேரா குழுமத்துடன் சேர்ந்து இந்தியன் ஆயில் நிறுவனம் தனது பெட்ரோல் பங்க் நிலையங்களில் உணவகத்தை திறக்கப்போவதாக அறிவித்திருந்தது. அதில் முதல் உணவகமாக அமராவதி நெடுஞ்சாலையில் ஒரு உணவகம் திறக்கப்பட்டுள்ளது. 

 

 

ii

 

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்குகள் மொத்தம் 2,250 இருக்கிறது எனவும், அதில் 130 பங்குகள் நெடுஞ்சாலையில் உள்ளது எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த பெட்ரோல் பங்க் நிலையங்களில் எல்லாம் விரைவில் இதுபோன்ற உணவகங்களை திறக்கபோவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து; அலறியடித்து ஓடிய மக்கள்

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Boiler explosion accident in Indian Oil Company in chennai

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ஐ.ஓ.சி (இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு வேலை செய்து வருகிறார்கள்.  இந்த நிறுவனத்தில் இருந்து பெட்ரோலியம், எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இன்று (27-12-23)இந்த நிறுவனத்தில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லர் வெடித்ததை அடுத்து நிறுவனத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த விபத்தால், அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

இதனையடுத்து, அப்பகுதியில் தீப்பற்றி எரிந்து பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில், பாதிப்புள்ளாகிய ஊழியர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதில், சரவணா மற்றும் பெருமாள் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சரவணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டையார்பேட்டை பகுதியை சுற்றிலும் எண்ணெய் நிறுவனங்கள் இருப்பதால், திடீரென்று எண்ணெய் கசிவால் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

"பெட்ரோல், டீசல் விலை இன்னும் உயர வாய்ப்பு"- இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சேர்மன் பேட்டி!

Published on 17/10/2021 | Edited on 17/10/2021

 

"Petrol and diesel prices likely to rise further" - Indian Oil Corporation Chairman interview!

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று (16/10/2021) இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். 

 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வைத்யா, "சர்வதேச அளவில் கரோனா பாதிப்பின் தாக்கம் மற்றும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், சர்வதேச டாலர் மதிப்பில் சர்வதேச கச்சா எண்ணெயின் விலை ஒரே சீராக இல்லாமல் மாறி மாறி வருவதன் காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து  வருகிறது. இன்னும் உயர வாய்ப்பு உள்ளது. 

 

மேலும், இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து சகஜ நிலைக்கு வெகுவாக திரும்புவதால் பெட்ரோல், டீசல், தேவையும் அதிகமாக இருக்கிறது. முன்பைவிட பொதுமக்கள் அதிக அளவில் பெட்ரோல், டீசல் பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாகவும் விலை உயர்ந்து காணப்படுகிறது. மேலும் சிலிண்டர் விலையும் இதே காரணத்தினால் உயர்ந்து காணப்படுகிறது" எனத் தெரிவித்தார்.