Skip to main content

இந்திய வரலாற்றில் முதன்முறை... பங்குச்சந்தையில் நிகழ்ந்த சாதனை...

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

indian markets sensex and nifty hits new record high

 

இந்திய வணிக வரலாற்றிலேயே முதன்முறையாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.  

 

கரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்புநிலை மெல்லத் திரும்பிவரும் சூழலில், இந்திய பங்குச்சந்தையும் குறிப்பிடத்தகுந்த அளவு ஏற்றத்தைச் சந்தித்து வருகிறது. இதில் இன்று காலை வணிகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய பங்குச்சந்தையும், மும்பை பங்குச்சந்தையும் மிகப்பெரிய ஏற்றத்தைச் சந்தித்தன. 

 

ஃப்யூச்சர் குழுமத்தின் சில்லறை சொத்துக்களை வாங்குவதற்கான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின், 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்திற்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபி ஒப்புதல் அளித்ததையடுத்து, இன்று காலை முதலே ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் நல்ல ஏற்றத்தைக் கண்டன. இதன் பலனாக சென்செக்ஸ் மதிப்பு முதன்முறையாக 50,126.73 -ஐ எட்டியது, அதேபோல நிஃப்டி 50 குறியீடும் முதல் முறையாக 14,700 புள்ளிகளைக் கடந்தது. ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளின் விலை உயர்வு மட்டுமின்றி, அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதும் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே ட்வீட்... உலக பேமஸ் ஆன தாத்தா

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

 A single tweet... a world famous grandfather

 

ட்விட்டரில் ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்த ஒரே நாளில் உலக பேமஸ் ஆகியுள்ளார் ஒரு முதியவர்.

 

ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட ட்விட்டர் வீடியோ பதிவில் கால் சட்டையுடன் நிற்கும் முதியவர் ஒருவரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அந்த முதியவர் தனக்கு எல்.என்.டியில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளேன். 21 கோடி ரூபாய் மதிப்புள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவன பங்குகள்; ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய கர்நாடக வங்கியின் பங்குகளை வைத்திருப்பதாகவும், இருந்தாலும் தான் எளிய வாழ்க்கை தான் வாழ்ந்து வருவதாய் அசால்ட்டாக புட்டு புட்டு வைத்தார். ஆனால், இது உண்மையா பொய்யா என தெரியாமல் வீடியோவை பார்ப்பவர்கள் குழம்பி வருகின்றனர். சிலர் அந்த முதியவர் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை தான் வைத்துள்ளார். ஆனால் மாற்றி சொல்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர். எப்படியோ ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார் அந்த தாத்தா.

 

 

 

Next Story

பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கம்; சென்செக்ஸ் 953 புள்ளிகள் சரிவு! 

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

 

Bear Dominance in Stock Markets; Sensex 953 points decline!


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 81.67 ரூபாய்  வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58 காசுகள் சரிந்திருக்கிறது. 

 

கடந்த நான்கு தினங்களில் ரூபாயின் மதிப்பு 1.93 காசுகள் சரிந்துள்ளது. இதற்கிடையில், இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 953 புள்ளிகள் சரிந்து 57,145 புள்ளிகளில் நிறைவடைந்தது. 

 

தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 311 புள்ளிகள் இறங்கி 17,016 புள்ளிகளில் முடிந்தது. சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமாக, நிதிச்சந்தைகளில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறுவதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.