இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இன்று கரோனாதடுப்பூசிசெலுத்துவதற்கான முன்னோட்டம் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் நடைபெறும்கரோனாதடுப்பூசிசெலுத்துவதற்கான முன்னோட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷவர்தன் ‘கரோனா தடுப்பூசி, நாடு முழுவதும் மக்களுக்குஇலவசமாக செலுத்தப்படும்’ என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள், தங்கள் மாநிலங்களில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.