ADVERTISEMENT

இந்தியா முழுவதும் தடுப்பூசி...! - தேதியை அறிவித்த மத்திய அரசு!

04:48 PM Jan 09, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT


இந்தியாவில் இரண்டு கரோனா தடுப்பூசிகளுக்கு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசி செலுத்துவது எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு நிலவியது.

ADVERTISEMENT

இந்தநிலையில், வருகின்ற 16 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்துவதில், கரோனா முன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, அதன்பிறகு 50 வயதிற்குக் கீழுள்ள, இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

கரோனா முன்களப்பணியாளர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 3 கோடி பேர் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், 50வயதிற்கு கீழே இணை நோய் உள்ளவர்கள் 27 கோடி இருப்பார்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு, கரோனா தடுப்பூசி செலுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தயார்நிலையை ஆராய்ந்த பிறகு, தடுப்பூசி செலுத்தும் பணிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT