கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

indian government advices indians on america iran issue

Advertisment

Advertisment

இந்தநிலையில், ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் உள்ள அல் ஆசாத், இர்பில் விமானப்படை தளங்கள் மீது 10- க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அந்த பிராந்தியத்தில் மேலும் பதட்டம் அதிகரித்திருக்கும் நிலையில், இந்திய அரசு இந்தியர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. ஈராக் நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும் என்றும், அத்தியாவசிய தேவையின்றி இந்தியர்கள் ஈராக் நாட்டுக்கு செல்ல வேண்டாம் எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், ஈராக்கில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் வலியுறுத்தியுள்ளது. ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை பாக்தாத், எர்பில் ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய தூதரகங்கள் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஈராக், ஈரான், வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுவதால் அந்த வான்வழியை இந்திய விமான நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.