சீனா திட்டமிட்டே தாக்கியுள்ளது... -இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

Indian Foreign Minister Jaishankar alleges

சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊடுருவியதால், கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப்பகுதியில், இந்தியா, சீனாராணுவத்தினருக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த மோதலை தடுத்து அமைதியை நிலைநாட்ட இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது.இந்தச்சூழலில், இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் திங்கள்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இரு நாட்டு உறவில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக சீனா - இந்தியாவெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யி உடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இருதரப்பும் பரஸ்பரம் நல்லுறவுடன்எல்லை பிரச்சனையைஅணுகலாம் என இந்த பேச்சுவார்த்தையில் கூறபட்டதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இந்த பேச்சு வார்த்தையில்லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும்,ஜூன் 6-இல் இருநாட்டு மூத்த தளபதிகள் பேச்சின் இடையே புரிந்துணர்வை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.இருதரப்பு ஒப்பந்தங்கள் நெறிமுறைகளுக்கு கட்டுப்படவேண்டும். பேச்சுவார்த்தை முடிவில் ஒட்டு மொத்தநிலைமையையும் பொறுப்பாக கையாளஇரு தரப்பும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

china India minister
இதையும் படியுங்கள்
Subscribe