Advertisment

அமைதியாகப் போராட விவசாயிகளுக்கு உரிமையுண்டு! - அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து!

delhi farmers protest

Advertisment

கனடா மற்றும் பிரிட்டிஷ் அரசுகள் இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தைச் சேர்ந்த சிலரும், அமைதியாகப் போராட இந்திய விவசாயிகளுக்கு உரிமையுண்டு எனத் தெரிவித்துள்ளனர். மேலும், மோடி அரசு, போராட்டக்காரர்களுடன் பயனுள்ள வகையில் பேச்சு நடத்தவும் வலியுறுத்தியுள்ளனர்.

கனடாபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தபோது, இந்தியத் தரப்பிலிருந்து கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்தது. ஆனால், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆளும்கட்சிப் பிரமுகர்களிடம் இருந்துஅத்தகைய கருத்துகள் எழுந்த நிலையில், இந்தியா அதேபோன்ற எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை.

டக்லாமால்பா, ஜோஸ் ஹார்டர், டி.ஜே.காக்ஸ், ஆன்டி லீவின் உள்ளிட்ட எம்.பி.க்கள், இந்திய விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

MPs America Delhi Farmers Protest
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe