கரோனாவைக் கட்டுப்படுத்த இந்திய மருத்துவர் ஒருவர் புதிய சிகிச்சை முறையைக் கையாள்வது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

indian doctor discovers new treatment for corona

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,21,412 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,004 பேர் குணமடைந்துள்ளனர், 33,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் 194 பேரும், மகாராஷ்டிராவில் 193 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ள சூழலில், இதிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க புதிய முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக பெங்களூருவைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தெரிவித்துள்ளார்.

மனிதனின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் ஒரு மருந்து மூலம், இதனைக் கட்டுப்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "கரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதற்காக ஊசி மூலம் செலுத்தக்கூடிய சைட்டோகைன்களை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த சோதனையின் ஆரம்பக் கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். இந்த வார இறுதிக்குள் இந்த சிகிச்சை பரிசோதனைக்குத் தயாராக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment