இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அடிக்கடி பெண்கள் பிரச்சனையில் மாட்டிக்கொள்வது வழக்கம். அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனைகள் எழுந்தது குறிப்படத்தக்கது. இந்நிலையில் முகமது ஷமி ட்விட்டரில் ஒரு இளம் பெண்ணுக்கு மெசேஜ் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

cricket

இவரது மெசேஜ்க்கு அந்த பெண் நேற்று ட்விட்டரில் அவருக்கு ஒரு ரிப்ளை ட்வீட் செய்துள்ளார். அதில் அந்த பெண் 1.4 மில்லியன் பேர் என்னை பின்பற்றி வருகின்றனர். ஒரு கிரிக்கெட் வீரர் ஏன் எனக்கு தொடர்ந்து மெசேஜ் செய்து வருகிறார் என்று ட்வீட் செய்துள்ளார். இவரின் இந்த டீவீட் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த பெண் செய்த டிவீட்டால் தான் நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் முகமது ஷமி இந்திய அணியில் இடம் பெறவில்லை எனவும் சில ரசிகர்கள் முகமது ஷமியை கேள்வி எழுப்பி வருகிறார்கள்.