இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், சென்னை சூப்பர் கிங் அணியின் ஆல் ரவுண்டருமான ரவீந்தர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஏற்கெனவே பாரதிய ஜனதா கட்சியில் ஏற்கெனவே இணைந்துள்ளார். இந்நிலையில் ஜடேஜாவின் தந்தை அனிருத்ஷின் மற்றும் ஜடேஜாவின் தங்கை நயனாபா ஆகியோர் குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் கலவட் நகரில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தின் போது இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் ஹர்திக் பட்டேல் உள்ளிட்டோர் முன்னிலையில் இணைந்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ravindra jadeja family.jpg)
இதனால் ஒரே குடும்பத்தில் இரண்டு கட்சியினர் உள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் பட்டேல் சமூக இட ஒதுக்கீட்டிற்காக போராடிய ஹர்திக் பட்டேல் குஜராத்தில் ஜாம்நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய நிலையில் குஜராத்தில் பட்டேல் இனத்தினர் நடத்திய போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர். இதற்கு ஹர்திக் பட்டேலே முழு பொறுப்பு என குஜராத் உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹர்திக் பட்டேல்மனு செய்திருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ravindra jadeja.jpg)
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஹர்திக் பட்டேலுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை ஏப்ரல் 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜாம்நகர் மக்களவை தொகுதியில் ஹர்திக் பட்டேலுக்கு பதிலாக முலு கந்தோரியாவிற்கு சீட் வழங்கியது காங்கிரஸ் கட்சி.
பி.சந்தோஷ், சேலம் .
Follow Us