"தயவுசெய்து காப்பாற்றுங்கள்"... கரோனா சந்தேகத்தால் சிக்கித்தவிக்கும் நூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள்...

சுமார் 3,700 பயணிகளுடன் ஜப்பான் வந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ள சூழலில், அந்த கப்பலில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் தங்களை மீட்குமாறு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

indian crew in diamond princess request to indian pm

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கடந்த ஜனவரி 20-ம் தேதி 3,700 பயணிகளுடன் ஜப்பானின் யோகோஹாமா நகரில் இருந்து ஹாங்காங் புறப்பட்டது டைமண்ட் பிரின்சஸ் கப்பல். பின்னர் ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு திரும்பும்போது, கப்பலில் இருந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜப்பானுக்கு வந்த அந்த கப்பலுக்கு பிப்.1-ம்தேதி அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு பயணிகளுக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டதில், இதுவரை 136 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கப்பலில் 138 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் நேற்று வெளியிட்ட வீடியோஒன்றில், கரோனா பாதிப்பு உள்ள அந்த கப்பலில் இருந்து தங்களை மீட்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கப்பலில் பயணிகள் அவர்களுக்கான தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு, கப்பலுக்குள் நடமாடவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

china corona virus
இதையும் படியுங்கள்
Subscribe