
இந்தியப் பிரதமர் மோடி, வெளிநாட்டுப் பயணங்களுக்காக எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருபவர். கடைசியாக 2019 நவம்பர் மாதம் வெளிநாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்திருந்த பிரதமர் மோடி, அதன்பிறகு சுற்றுப்பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை. கடந்த வருடம் கரோனா பரவலால் பிரதமர் மட்டுமின்றி, மத்திய அமைச்சர்களும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், 15 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக இன்று வெளிநாட்டுப் பயணமாக வங்கதேசம் சென்றடைந்தார் பிரதமர் மோடி. 2 நாள் பயணத்தில் வங்கதேச தேசிய தின விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், வங்க தேச உருவாக்கத்தில் இந்திய வீரர்களின் தியாகத்தைப் பற்றி பேசினார். அதில், "இரண்டு நாட்டு மக்களின் இரத்தத்தில் இந்த விடுதலை சாத்தியமானது. எனவே இருநாட்டுக்குமான உறவைப் பிரிக்க முடியாது. வங்கதேச சகோதர சகோதரிகள் இந்திய நாட்டு கரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதில், இந்தியா பெருமை அடைகிறது" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)