indian aviation to resume the service with certain rules

Advertisment

நாளை முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில், ஊரடங்கு முடிவடைந்த பிறகு விமானப் போக்குவரத்தும் படிப்படியாகத் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தட்டுள்ள சூழலில் நாளை முதல் மாநிலங்களுக்கு இடையே 15 ரயில்கள் இயக்கப்படும் என்ற ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் விமான சேவைகளும் விரைவில் துவங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முதல்கட்ட வேலையாக டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமானநிலையங்களில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சக அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், மே 17- ஆம் தேதிக்குப் பிறகு உரியக் கட்டுப்பாடுகளுடன் 25% உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், விமானசேவையைப் பெறுவதற்கு 'ஆரோக்கிய சேது' செயலியை மொபைலில் வைத்திருப்பது கட்டாயம் எனவும், இரண்டு மணி நேரத்துக்குக் குறைவான பயண நேரம் கொண்ட விமானங்களில் உணவுப் பொருள்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.