indian army personnel passed away in ladakh

Advertisment

இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீன ராணுவத்தினர் முகாமிட்டு வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே சமீப காலமாகப் பதட்டமான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் நேற்றிரவு லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினருக்கு, சீன ராணுவத்தினருக்கு மோதல் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி இரண்டு வீரர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த மோதலால் இந்திய சீன எல்லையில் பதட்டம் மேலும் அதிகரித்துள்ள சூழலில், இருதரப்பில் இருந்தும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.