Advertisment

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ரகசிய ஆவணங்கள் வழங்கிய இந்திய ராணுவ வீரர் கைது!

INDIAN ARMY MAN

Advertisment

போக்ரான் ராணுவத் தளத்திற்குகாய்கறி விநியோகம் செய்து வந்தவர் ஹபீபுர் ரஹ்மான். இவர்பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு இந்திய ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வழங்கியதாக கடந்த செவ்வாய்கிழமைகைது செய்யப்பட்டார். இந்தநிலையில்இன்று இந்த விவகாரத்தில் தொடர்புடைய ராணுவவீரர்பரம்ஜித் என்பவரைடெல்லி போலீஸார்இன்று கைது செய்துள்ளனர்.

பாதுகாப்புத்துறை சம்மந்தமான சில முக்கிய ஆவணங்கள், பாகிஸ்தானுக்கு அனுப்படுவதாகடெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு உளவுத்துறையின் மூலம் தகவல் கிடைத்துள்ளது. ஹபீபுர் ரஹ்மான் பற்றியும் அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போக்ரானில் சோதனை நடத்திய போலீஸார், ஹபீபுர் ரஹ்மானை கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து ஹபீபுர் ரஹ்மானிடம் நடத்திய விசாரணையில் ஹபீபுர் ரஹ்மானுக்கு பரம்ஜித் ரகசிய ஆவணங்களை வழங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபீபுர் ரஹ்மான் உறவினர்கள் பாகிஸ்தானில்உள்ளனர். அவர்களை சந்திக்க சென்றபோது ஹபீபுர் ரஹ்மானுக்கு சில அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாககூறியுள்ள காவல்துறை, ரகசிய ஆவணங்களுக்கு பதிலாக ஹபீபுர் ரஹ்மானுக்கு பணம் அளிக்கப்பட்டுள்ளதும் என்றும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய வங்கி கணக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

indian army Pakistan
இதையும் படியுங்கள்
Subscribe