மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்திற்கு ராகுல் காந்தி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா இரு முனைகளில் அச்சுறுத்தல்களைச் சந்தித்து வரும் நிலையில், அக்னி பாதைத் திட்டம் தேவையற்றது. அது நமது படையின் செயல் திறனைக் குறைத்து விடும். இந்திய படையினரின் பாரம்பரியம், கண்ணியம், வீரம், ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.