இந்தஆண்டு ஆரம்பத்தில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாகஇந்தியா நடத்திய பால்கோட் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன்.

Advertisment

indian airforce released teaser for a video game

பாகிஸ்தானின் விசாரணையின் போதும் இந்திய ராணுவம் குறித்து எந்த தகவலையும் அவர்களுக்கு தெரிவிக்காமல், அவர் சாதுரியமாக பேசியது, அவரை ஒரு ஹீரோவாகவே மாற்றியது. பலரும் அபிநந்தனின் மீசை மற்றும் ஹேர் ஸ்டைலை வைத்துக்கொண்டனர்.

இந்நிலையில் அபிநந்தனை வைத்து மற்றவர்களையும் தேச பக்தியுடன் இருக்க ஊக்கப்படுத்தும் விதமாக இந்திய விமான படை புதிய மொபைல் கேம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கான டீசரை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் அபிநந்தனின் உருவம் தான் கேமின் ஹீரோவாக உள்ளது. பல வகையான விமானங்களை பயன்படுத்தி எதிரிகளுடன் சண்டையிடுவது போன்று இந்த கேம் வடிவமைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கேமின் டீசர் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.