இந்திய விமானப்படை வீரராக பணியாற்றியவர் சிபிஆர் பிரசாத் (73 வயது). இவருக்கு ரயில்வே துறையில் உயர் அதிகாரி வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனையடுத்து 108 மாதங்கள் (9 ஆண்டுகள்) விமானப்படையில் பணியாற்றிய நிலையில், ரயில்வே துறையில் பணியாற்ற விரும்பிய பிரசாத், இந்த பணியை ராஜினாமா செய்துள்ளார். அதன் பின்னர் ரயில்வே பணி பிரசாத்துக்கு கிடைக்கவில்லை. இதனால் பணியாற்றி வந்த விமானப்படை பணியும் இல்லாததால், பண்ணை தொடர்வதற்கான அனைத்து பயிற்சிகளையும் முழுமையாக கற்றுக் கொண்டு பண்ணை ஒன்றை தொடங்கியுள்ளார்.

Advertisment

indian airforce former chief prasad donate rs 1.08 crores and meet defence minister rajnath singh

இந்த பண்ணை அமோகமாக செயல்பட்டு வருவதாக பிரசாத் தெரிவித்தார். பின்னர், தான் 9 ஆண்டுகள் பணியாற்றி அரசிடம் இருந்துப் பெற்ற சம்பளம் ரூபாய் 1.08 கோடியினை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து திருப்பிக் கொடுத்துள்ளார். இந்த தொகை பாதுகாப்பு துறைக்கு நிதி உதவியாக அளித்துள்ளார். தான் அரசிடம் வாங்கிய சம்பளத்தை நல்ல நிலைமைக்கு வந்தவுடன், மத்திய அரசுக்கு திருப்பி கொடுத்த முன்னாள் விமானப்படை வீரர் பிரசாத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றன.