Skip to main content

போர் விமானம் விபத்து... ஒருவர் உயிரிழப்பு...

Published on 01/02/2019 | Edited on 01/02/2019

 

aa

 

பெங்களூருவின் ஏமலூர் பகுதியில் உள்ள எச்.ஏ.எல் விமான நிலையத்தில் இந்திய விமானப் படையின் போர் விமானமான மிராஜ் 2000, இன்று காலை பயிற்சி மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம், மேலெழுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் மேலெழ முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக சுற்றுச்சுவர் மீது விமானம் மோதி தீப்பிடித்துள்ளது. இதில் போர் விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

PM Modi inaugurated the International Air Show

 

பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 14வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமான தளத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

 

அமைச்சர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் என முக்கியமானவர்கள் கலந்துகொண்டுள்ள இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் இந்த கண்காட்சியில் உள்நாட்டு தயாரிப்பு விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, வானில் சாகசங்களை நிகழ்த்தியது. 

 

இந்த கண்காட்சி மேக் இன் இந்தியா, வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய சர்வதேச விமான கண்காட்சி வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 

 

 

Next Story

'அக்னிபத்' திட்டத்தில் சேர மூன்று நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம்! 

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

56,960 people apply to join 'Agnipath' scheme in three days!

 

'அக்னிபத்' திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேருவதற்கு மூன்று நாட்களில் 56960- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 

 

'அக்னிபத்' திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேருவதற்கு வரும் ஜூன் 24- ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று (26/06/2022) வரை மூன்று நாட்களில் 56960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வரும் ஜூலை 5- ஆம் தேதி வரை https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

முன்னதாக, அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14- ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் நிலவும் நிலையில், மூன்றே நாட்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.