கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனதின் குரல் எனும் மன்-கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தற்பொழுது உரையாற்றி வருகிறார். இந்த உரையில்,
கரோனவை தடுப்பது வாழ்வா சாவா என்ற போராட்டத்தை போன்றது. நான் எடுத்த இந்த கடினமான முடிவால் சிரமத்திற்கு உள்ளானவர்களிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். நான் எடுத்த இந்த முடிவால் என் மீது சிலர் கோபத்தில் இருப்பதை நான் அறிவேன். குறிப்பாக ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கரோனாவைகட்டுப்படுத்த இதைத் தவிர வேறு வழி கிடையாது. விதியை மீறி வெளியே வருபவர்கள் உயிரோடு விளையாடுகின்றனர். விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் சிலர் கரோனா வைரஸ் ஆபத்தில் இருந்து தப்ப முடியாது என்றார்.