Advertisment

இலங்கையின் ஜனநாயக மீட்சிக்கு இந்தியா ஆதரவளிக்கும்- வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு!

 India will support Sri Lanka's democratic recovery - Foreign Ministry announcement!

Advertisment

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தின் பலனாக ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து இலங்கை மொரட்டுவை மேயர் வீட்டிற்கு தீவைக்கப்பட்டதோடு, கலவரத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலா சடலமாக மீட்கப்பட்டார். குருநாகல்லில் உள்ள மஹிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் வீடு முழுமையாக எரிந்து நாசமானது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோல் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவின் வீட்டிற்கும் தீவைக்கப்பட்டது. ஒட்டுமொத்த இலங்கையும் கலவரக் காடாககாட்சியளிக்கும் நிலையில் இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீட்சிக்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மீட்சிக்கு இந்தியா பல்வேறு உதவிகளைச் செய்துவரும் நிலையில் தமிழக அரசு சார்பிலும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக முதல்வரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

India srilanka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe