'India will not hesitate to take action if it causes danger'- Rajnath Singh's speech at Ayudha Puja ceremony

வெறுப்பினாலோ, இகழ்ச்சியினாலோ இந்தியா எந்த நாட்டையும் தாக்கியது இல்லை என ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

மேற்கு வங்கம் டார்ஜிலிங்கில் ஆயுத பூஜை நிகழ்ச்சியில் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அங்கிருந்து போர் கருவிகள், போர் தளவாடங்கள், ராணுவ வாகனங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ''இந்தியா எந்த நாட்டையும் இகழ்ச்சியின் காரணமாகவோ வெறுப்பின் காரணமாகவோ இதுவரை தாக்கியது இல்லை. அதேநேரம் இந்தியாவிற்கு அபாயம் ஏற்படுத்தினால் பெரிய அடியை எடுத்து வைக்க இந்திய ராணுவம் தயங்காது. தேவைப்பட்டால் இந்தியா ஆயுதங்களையும் தளவாடங்களையும் முழு ஆற்றலுடன் பயன்படுத்தப்படும். இதற்கு ஆயுத பூஜையேஅடையாளம். நமது நாட்டு ஒற்றுமையை இறையாண்மையையும் இகழ்ந்தாலும், உருகுலைக்க முயன்றாலும் மட்டுமே இந்தியா போரிடும். உண்மை, மதம், மனித மாண்பு ஆகியவற்றின் மீது யுத்தம் நடத்தினாலும் இந்தியா போரிடும். இதுதான் நமது பாரம்பரியம்'' என தெரிவித்துள்ளார்.