
இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின்இரண்டாவது கட்ட அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குத் துறைசார்ந்த அமைச்சர்கள் வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ பதிலளித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இன்றையகேள்வி நேரத்தில், உறுப்பினர் கேள்விக்குப் பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்நிதின் கட்கரி, 93 சதவீத வாகனங்கள்,ஃபாஸ்டாக் முறையில் கட்டணம் செலுத்துவதாகவும், 7 சதவீத வாகனங்கள் இரண்டு மடங்கு சுங்கக்கட்டணம் செலுத்தினாலும் ஃபாஸ்டாக்கை பொருத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இன்னும் ஒரு வருடத்திற்குள் சுங்கச்சாவடிகள் அனைத்தும் நீக்கப்படும். சுங்கக்கட்டணத்தைவசூலிப்பது ஜி.பி.எஸ் மூலமாக நடைபெறும். ஜி.பி.எஸ் இமேஜிங்அடிப்படையில் வாகனத்திற்கான பணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us